ஓபிஎஸ் கேட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் இன்று வெளியாகும் என தெரிகிறது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் இடைக்க உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற பின்னர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகம் வாழை மரம் கட்டப்பட்டு, வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டு, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விடிய விடிய நடந்த அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை ஈபிஎஸ் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
ஓபிஎஸ், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளிவர வேண்டும் என்று நிபந்தனை விதித்து முதல்வர் வேட்பாளர் ரேசில் இருந்து விலகிக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த 11 பேர் கொண்ட குழுவில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும், ஈபிஎஸ் தரப்பில் 6 பேரும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி பார்த்தாலும் ஈபிஎஸ் போட்ட கணக்கே பிரதானமாக அதிமுகவில் உள்ளது. முதல்வர் வேட்பாளர் என்ற அங்கீகாரமும் கிடைக்கும், 11 பெர் குழுவிலும் ஈபிஎஸ் கை ஓங்கியே இருக்கும்.