இந்த ஆண்டு முதல் நாள் கூடிய தமிழக சட்டப்பேரவையை புறகணித்ததற்கான காரணத்தை எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரான் இன்று ஆளுநர் உரையாற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இது குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருட்களைத் தடுக்க அரசு தவறிவிட்டது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஏழை, எளிய மக்களின் மீது அக்கறையில்லாத அரசாக உள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. காவல் துறை அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிமுகவினர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைகளை கண்டிக்கிறோம். இவற்றையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என தெரிவித்தார்.