Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்த அரசு மக்களை பற்றி சிந்திக்கவில்லை - செந்தில் பாலாஜி விளாசல்

இந்த அரசு மக்களை பற்றி சிந்திக்கவில்லை - செந்தில் பாலாஜி விளாசல்
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (17:33 IST)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரியின் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றது.

 
அரசின் நிதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கண்துடைப்பிற்காக இருந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி இன்று நேரில் களத்தில் இறங்கினார். 
 
அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூடிய செந்தில் பாலாஜி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததையும் நேரிடையாக ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளத்தினால் தத்தளித்த மக்களுக்கு வேஷ்டி, சேலைகள், பாய், பெட்ஷீட்களை கொடுத்து உதவினார். 
 
அப்போது,. செய்தியாளர்களை சந்தித்த அவர் “வெள்ளம் பாதித்த வீடுகளில் இருக்கும் மக்களை அங்குள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார் மஹாலில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர்.  அந்த மக்களுக்கு எங்களுடைய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் இரண்டாவது முறை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 
 
மேலும் இந்த பகுதிகளில் வெள்ள நீர் புகாமல் தடுக்க, தடுப்பு சுவர் கட்ட இரு முறை சட்டமன்றத்தில் நான் குரல் கொடுத்தேன். ஆனால் இந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு அதை செவிசாய்க்கவில்லை. பைபாஸ்-ல் வந்து பைபாஸ்-ல் செல்லும் கருர் எம்.பி தம்பித்துரை இதே பகுதியில் பேட்டி கொடுத்துள்ளார். 
 
நல்ல தீர்ப்பு ஒரிரு தினங்களில் நல்ல தீர்ப்பு 18 எம்.எல்.ஏ க்களின் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு நல்லபடியாக தீர்ப்பு வரும், பின்னர் மக்களுக்காக நாங்கள் சேவை செய்வோம். இங்கு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நாங்கள் பார்க்க வரும் போது, காவல்துறையும், வருவாய்த்துறையும் கலெக்டரை பார்த்து அனுமதி பெற்றுத்தான் பின்னர் வரவேண்டுமென்றும்  கூறுவது வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் என அவர் புகார் கூறினார்.
-சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன நடக்குமென தெரியவில்லை : நடிகை அனன்யா (வீடியோ)