Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கீழடி தொல் தமிழரின் மேன்மை மிகு நகர நாகரீகம் தொடர்பான கண்காட்சி

கீழடி தொல் தமிழரின் மேன்மை மிகு நகர நாகரீகம் தொடர்பான கண்காட்சி
, வெள்ளி, 15 நவம்பர் 2019 (21:10 IST)
கரூர் பரணி பார்க் பள்ளிக்கல்விக்குழுமத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில்  கீழடி தொல் தமிழரின்  மேன்மை மிகு நகர நாகரீகம் தொடர்பான  கண்காட்சியில் ஏராளமான காட்சி படைப்புகளைபள்ளி மாணவ-மாணவிகள் காட்சி படுத்தியிருந்தனர்.
 

கரூரை அடுத்த வெண்ணெய்மலை பகுதியில் செயல்பட்டு வரும்  கரூர் பரணி பார்க்  கல்வி குழுமங்களின்  சார்பில்  12 - ம்  வருடம் குழந்தைகளுக்கான  அறிவியல்  கண்காட்சி நடைபெற்றது.  இந்த கண்காட்சியில்  தமிழர்களின்  பெருமையை  பறை சாற்றும்  வகையில் கீழடி  தொல்  தமிழரின் மேன்மை மிகு  நகர  நாகரீகம்  தொடர்பான  ஏராளமான படைப்புகளை  மாணவ, மாணவிகள்  காட்சி படுத்தியிருந்தனர்.  மேலும்., 2500-ஆண்டுகளுக்கு  முன்பு  தமிழை எப்படி எழுதியிருந்தனர்  என்பது  குறித்த  குறிப்புகளையும் பார்வைக்கு வைத்ததோடு  அது   தொடர்பான  எழுத்துக்களை  மாணவ, மாணவிகள் எழுதியும்  காட்டினர். கீழடி  ஆய்வின்  போது  கிடைத்த  பொருட்கள் தொடர்பான படக்காட்சிகள்  காகிதத்தால்  செய்யப்பட்ட  அன்ன  பறவை பொம்மைகள்  காய்  கனிகளை கொண்டு  வடிமைத்த  கடவுள்  உருவங்கள்   தத்ரூபமான  இயற்கை  படக் காட்சிகள் குறித்து வரைந்த ஓவியங்கள்  நாட்டுக்காக  போராடிய  தலைவர்களின்  வரைந்த ஓவியங்கள் கார்ட்டூன்கள்  தவறான  தொடுதல்கள்  குறித்த   குழந்தைகளிடம்  விழிப்புணர்வை எற்படுத்தும்  காட்சி  படங்கள் அன்றாடம்  பயன்படுத்தும்  பொருட்களை கொண்டு  தயாரித்த மாதிரி மடிக்கணிகள்  என  ஏராளமான  படைப்புகளை  படைத்திருந்தனர்.  

இக்கண்காட்சியை  மாவட்ட  குழந்தைகள்  பாதுகாப்பு  நல  அலுவலர் கவிதா  துவங்கி வைத்தார்.  பள்ளியின்  தாளாளர்  மோகனரங்கன் செயலாளர்  பத்மாவதி,  பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன்  பள்ளி  மாணவ., மாணவிகளின்  பெற்றோர்கள்  என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்தில் சிக்கிய பெண்ணின் கால் அகற்றம்: அதிர்ச்சி தகவல்