Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

CAA- சட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்- அமைச்சர் உதயநிதி

udhay

Sinoj

, புதன், 31 ஜனவரி 2024 (18:40 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும்  நிலையில், சமீபத்தில், மத்திய இணை அமைச்சர் ஒருவர் ''குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம்'' கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஏறற்கனவே இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்த நிலையில், ஒன்றிய இணை அமைச்சரின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளர.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 
 
மத அடிப்படையிலும் - இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கனவே கிழித்து எறிந்த மக்கள், இம்முறை அதனை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்.
 
அடிமைகளின் உதவியோடு கொண்டு வரப்பட்ட மானுட விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று நம் முதலமைச்சர் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள்.
 
பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லையோ, அதேபோலக் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தாலும் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது ''என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது- எடப்பாடி பழனிசாமி