தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக 2 நாட்களுக்கு கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நாகை-இலங்கை இடையிலான கப்பல் சேவை 2 நாட்களுக்கு, அதாவது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை-இலங்கை இடையே செல்லும் பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுகளின் காரணமாக கடல் சீற்றமாக இருக்கும் என்றும், சூறைக்காற்று வீசும் என்பதாலும் கப்பல் இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்றும், எனவேதான் நாகை-இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.