கனமழை காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடப்படுவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வெளியிட்ட செய்தியில் கூறியதாவது: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதற்காக ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா, பொதுமக்களின் பாதுகாப்பு முன்னேற்பாட்டிற்காக இன்று (15-ம் தேதி) முதல் 18-ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா சென்னை கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் இப்பூங்காவிற்கான அடிக்கல் நாட்டிய நிலையில் அக்டோபர் மாதம் 7 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.