Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை யாருக்கு? - இன்று இறுதி விசாரணை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (10:22 IST)
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை எந்த அணிக்கு சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரனை இன்று தேர்தல் ஆனையத்தில் நடைபெறுகிறது.


 

 
எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை நடத்தி, அதன் தீர்மானங்களை தேர்தல் கமிஷனில் சமர்பித்து, பெருவாரியான நிர்வாகிகள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என தினகரன் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அது தொடர்பான விசாரணை கடந்த 6ம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.  
 
அப்போது, கூடுதம் ஆவணங்களை தாக்கல் செய்ய தினகரன் தரப்பிற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அந்த விசாரணை 16ம் தேதியே நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.


 

 
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது. எனவே, இரட்டை இலைக்கு யாருக்கு சொந்தம் என்பது இன்றைய விவாதத்தில் தெரிய வரும். ஆனால், அதை தேர்தல் ஆணையம் இன்றே அறிவிக்குமா இல்லை சில நாட்கள் கழித்து அறிவிக்குமா என்பது தெரியவில்லை. 
 
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க நவம்பர் 10ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments