காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளிட்ட முக்கிய துறைமுகங்கள் தன்னாட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி நிறுவனத்திற்கு அளித்து விட்டதாகவும், அங்குள்ள மீனவர்களின் இடங்கள் அபகரிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பலர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதானி நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட உள்ளதாக அகில இந்திய மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க போவதில்லை என்றும் மீனவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.