வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வரை சூறை காற்று வீசும் என்றும் எனவே நாளை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து நாளை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது
மேலும் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு பகுதிக்கு பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும் அதன்பின் தமிழகம் புதுச்சேரியை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.