Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காத்திருக்கு மீண்டும் ஒரு வெள்ள பிரளயம்: என்னவாகும் சென்னை?

காத்திருக்கு மீண்டும் ஒரு வெள்ள பிரளயம்: என்னவாகும் சென்னை?
, வியாழன், 11 அக்டோபர் 2018 (09:45 IST)
சென்னையில் கடந்த 2015 ஆண்டு வந்த வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. கனமழையில் சென்னையில் உள்ள ஏரிகள் உடைந்து நகரத்திற்கு தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் வீடுகளின் முதல் தளம் வரை தண்ணீர் நின்றது. 
 
இதனால், மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் பருவமழை துவங்க உள்ளதால், முன்னர் நடந்தது போல் எந்த மோசமான பாதிப்புகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுத்துள்ளது. 
 
ஆனால், மீண்டும் ஒரு பிரளயம் சென்னைக்கு வர இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்துள்ளார். அவர் மேற்கொண்ட ஆய்வில், எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் நீர்நிலை பகுதிகலை தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளது. இது போன்ற ஆக்கிரமிப்புகளால் மீண்டும் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா? வைரமுத்துவுக்கு கஸ்தூரி கண்டனம்