தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17 மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதிக மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருவதை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொட்டும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதாகவும் வினாடிக்கு 30000 கன அடி நீர் வரை திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்த பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.