கரூரில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை.
கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தீர்மானம் தெரிவிக்கப்பட்டது. மேலும் விடியா திமுக அரசு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றிய திமுக அரசின் மக்கள் விரோத போக்கினை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு தகவல் தொழில்நுட்பம் பெறும் உந்து சக்தியாக இருந்து வருகிறது. திமுக அரசின் ஊழல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்து வருகிறது. இதனைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம், இளைஞர்கள் உங்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை தலைவர் கவின்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் செந்தில்,
துணை தலைவர் சுப்பிரமணி, கார்த்தி, இணை செயலாளர்கள் கதிரேசன், சிவகுமார், சுரேஷ், துணை செயலாளர் கள் மகேஸ்வரன், தீனதயாளன், கீதா உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.