ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இலவசங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் நாதக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதேசமயம் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு இலவசங்கள், வழங்குதல், பணம் வழங்குதல் போன்றவைகளும் நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்களர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டதாக வெளியான புகாரில் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி சிவக்குமார் கூறுகையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.