மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ள அனுமதியின்படி ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நுகர்வோர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மின் கட்டண உயர்வு மட்டுமே ஒரே வழி என்று கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கி உள்ள அனுமதியின்படி அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் விண்ணப்பித்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மின்கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நுகர்வோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.