Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்: ஆளுனருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுமா?

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (07:30 IST)
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ளதை அடுத்து ஒரு சில கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூற வேண்டும் என ஆளுநர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரைக்கு பின் ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய ஆளுநர் உரையில் அரசின் நலத்திட்டங்கள், மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ள முக்கிய திட்டங்கள் ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து எம்.எல்..ஏக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments