இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனை அடுத்து சென்னை நபர்கள் அண்டை மாவட்டங்களுக்கு செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிக அதிகம் இருக்கும் காரணத்தால் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று சென்னை நபர்கள் மது வாங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
இதனை அடுத்து சென்னையில் இருந்து மாவட்ட எல்லைதாண்டி டாஸ்மாக் கடைக்கு செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள் கட்டாயம் இருப்பிட முகவரியுடன் கூடிய அடையாளச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மது வழங்கப்படும் என்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நபர்கள் எல்லை தாண்டினாலும் மது கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது