வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு இன்னும் ஒரு சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழக முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மழையின் சேதத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.