கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படும் என்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்கு தவறாமல் வரவேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு ஜூலை 5 வரை மட்டுமே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஜூலை 6முதல் ஜூலை 30 வரை பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே
இதனை அடுத்து நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கடைகள். அலுவலர்கள் வழக்கம்போல் நிபந்தனைகளுடன் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், பணிக்கு வராதவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதாக கருதப்படும் என்று கூறியுள்ளார்
சென்னையில் தளர்வுகள் இருந்தாலும் பேருந்து உள்பட எந்த வாகன வசதியும் இல்லாததால் எப்படி பணிக்கு வர முடியும் என்று ஊழியர்கள் மத்தியில் கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் பணிக்கு வந்தே தீர வேண்டிய கட்டாயம் இருப்பதால் அண்ணா பல்கலைக்கழகம் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்