தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்பதும் இதனை அடுத்து மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
மேலும் நேற்று முதல்வர் அறிவித்த அறிவிப்பில் நர்சரிப் பள்ளிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
நாளை முதல் அதாவது பிப்ரவரி 14 முதல் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடமிருந்து எந்த கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகம் வசூலிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.