தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதியில் பலர் பணம் செலுத்திய நிலையில் இதுவரை எவ்வளவு நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு விருப்பம்போல நிதி அளிக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியளித்தனர்.
இந்நிலையில் இதுவரை முதல்வர் நிவாரண நிதியில் கிடைக்குள்ள மொத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆன்லைன் மூலமாக ரூ.29.44 கோடியும், நேரடியாக ரூ.39.56 கோடியுமாக மொத்தம் ரூ.69 கோடி கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.