Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பஸ்சில் நடத்துனர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (23:18 IST)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு பஸ்சில் நடத்துனருக்கு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 
குமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு இன்று பிற்பகல் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது . அந்த பஸ்சில் நாகர்கோவில் அருமனையைச் சேர்ந்த  சுரேஷ்குமார் (47)என்பவர் நடத்துனராகவும் பேச்சிப்பறையைச் சேர்ந்த செல்வராஜ் (47) என்வர் டிரைவராகவும் பணியில் இருந்து உள்ளனர்.

அந்த பஸ் வள்ளியூரை கடந்து வாகைகுளம் அருகே வரும் பொழுது நடத்துனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.  உடனே மயங்கிய அவர் சரிந்து விழுந்தார்.  இதனை கண்டு அதிர்ந்த பயணிகள் டிரைவருடன் சேர்து உடனடியாக அதே பஸ்சில் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். 

உரிய பணியாளர்கள் இல்லாததால் அதிக பணிச்சுமையுடன் தொடர்ந்து அவர் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சக பணியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை! - மக்கள் அதிர்ச்சி!

போலீசாரிடம் பிடிபடாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமீனுக்கு முயற்சியா?

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா? இன்டர்போல் உதவியை நாடும் வங்கதேசம்

இரண்டாவது மனைவியை 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! - திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments