புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மாவீரர்கள் சுப்ரமணியன், சிவசந்திரன் குடுமத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. இது நாடெங்கும் கடும் அதிர்வலைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்ற வீரரும் அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற வீரரும் வீர மரணமடைந்துள்ளனர். இருவரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் வழங்கப்படும் என நேற்றே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வீரமரணமடைந்த வீரர்கள் சுப்ரமணியன், சிவசந்திரன் ஆகிய இருவரின் குடும்பத்தில் உள்ள தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.