Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

'ஆளுநர் மத்திய அரசின் Nominee '- தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

'ஆளுநர் மத்திய அரசின்  Nominee '-  தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (15:48 IST)
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆளுராக ஆர்.என்.ரவி உள்ளார்.

தமிழக ஆளுனருக்கு எதிராக சமீபத்தில் மனு தாக்கல் செய்தது. இதுகுறித்து சமீபத்தில் உச்ச  நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த  நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தொடங்கியது.

அப்போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற அனுப்பினால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லையே என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில்,

''மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதபட்சத்திலும் பணமசோதாவாக இல்லாத பட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். பஞ்சாப் ஆளுனர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. மீண்டும் நிறைவேற்றி அனுப்பட்ட மசோதாவை ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது'' என்று கூறியது.

இதற்கு தலைமை நீதிபதி, ‘ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ அதிகாரம் இல்லை எனக் கூறியதை அடுத்து,குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர் மத்திய அரசின்  Nominee  என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ,இப்பிரச்சனைக்கு ஆளுனரே தீர்வு காணவேண்டும். இல்லையென்றால்   நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’’ என்று  தலைமை நீதிபதி எச்சரித்துளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் புயல் சின்னம்: பள்ளிகள் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!