Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அவசர அழைப்பு: ஆளுநர் அதிரடி உத்தரவு!

அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அவசர அழைப்பு: ஆளுநர் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (14:05 IST)
தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை அடுத்து அவரது தலைமையில் காபந்து அரசு நடந்து வருகிறது. நிலையான ஒரு அரசை அமைக்க ஆளுநர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.


 
 
134 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்கிறார் சசிகலா. ஆனால் அனைத்து எம்எல்ஏக்களும் கடத்தப்பட்டுள்ளனர், நானும் கட்டாயப்படுத்தப்பட்டு தான் ராஜினாமா செய்தேன் எனவே எனது பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் என பன்னீர்செல்வம் ஆளுநரிடம் கேட்டதாக தகவல்கள் வந்தன.
 
ஆளுநரும் பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக முடிவு எடுப்பார் என தகவல்கள் கசிகின்றன. பெரும்பான்மையை இருவரும் சட்டசபையில் நிரூபியுங்கள் என ஆளுநர் உத்தரவிட்டால் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஆட்சி கலைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சூழலில் ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் தமிழக சூழல் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழலில் தமிழக அனைத்து ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக வரும்படி கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments