துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்கல்வித் துறை செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்த பங்கும் இல்லை என்றும், துணை வேந்தர் தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை
வெளியிட்டுள்ளார்.
மேலும் பல்கலைகழக விவகாரங்களில் உயர்கல்வித் துறைக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுகொண்டுள்ளார்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்காமல், அதனை மீறும் வகையில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், யூஜிசி பரிந்துரைகளை தவிர்த்து தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பு யூஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது என்றும் கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.