Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷச்சாராயம் விற்றவருக்கே நிவாரணம் அறிவித்த அரசு - அண்ணாமலை டுவீட்

Annamalai
, செவ்வாய், 16 மே 2023 (22:54 IST)
தமிழகத்தில் விஷச்சாராய வழக்கில், கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ள அமாவாசை அவருக்கு அரசு ரூ.50000 இழப்பீடு  வழங்கியுள்ளதாக பாஜக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் விற்றவருக்கே ரூ. 50000  நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு.

இந்த விஷச் சாராய மரண விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை என்ற நபர் தானும் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

இதுபற்றி, பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பிற்குக் காரணமானவர் என்று அமாவாசை என்பவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அமாவாசை சித்தாமூர் திமுக ஒன்றிய துணைச் செயலாளரின் சகோதரர் ஆவார்.

கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை.

அவருக்கும் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திறனற்ற திமுக அரசு’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாக திறன் அற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி