சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்த மேடையில் எச்.ராஜாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா இந்த விவகாரம் குறித்து பதிலளிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு விஜயேந்திரரின் செயலை நியாயப்படுத்தினார் எச்.ராஜா.
இதனையடுத்து தற்போது மீண்டும் விஜயேந்திரருக்கு ஆதர்வாக எச்.ராஜா பேசியுள்ளார். விஜயேந்திரர் ஞானநிலையில் இருந்ததை குற்றம் என சொல்ல முடியாது. அவர் அமர்ந்திருந்தது அவமானமான செயல் அல்ல. தமிழ் மொழி தெய்வம், திராவிட இயக்கங்கள்தான் தமிழ் மொழியின் விரோதிகள் என எச்.ராஜா பேசியுள்ளார்.