நடிகர் அஜித்குமார் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை அதில் விருப்பமும் இல்லை என திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது குறித்து எச்.ராஜா தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அஜித் ரசிகர்கள் சிலர் பாஜவில் இணைந்தனர், அப்போது தமிழிசை அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தாமரையை மலர செய்ய உதவ வேண்டும் எனவும், பிரதமர் மோடியின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனாலேயே அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்க கூடும் என தெரிகிறது.
அந்த அறிக்கையில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன்.
என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையும், என ரசிகர்கல் பெயர்களையும் சம்பந்தப்படுத்தி சில செய்திகள் வெளியாகிறது.
தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொதுமக்களிடையே விதைக்கும். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என தெளிவாக தெரிவித்தார்.
இதனையடுத்து அஜித்தின் இந்த தெளிவான நிலைபாட்டிற்கு அரசியல் தலைவர் பலர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பாஜக்வை சேர்ந்த தமிழிசை மற்றும் எச்.ராஜா இதற்கு விதிவிலக்கு.
தமிழிசை, அஜித் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பாஜகவில் இணைந்து கொள்ள அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை என கூறினார்.
இதையடுத்து தற்போது எச்.ராஜா அரசியலுக்கு வரவில்லை என்றுதானே அஜித்குமார் கூறியுள்ளார். மற்றபடி பாஜகவை எதிர்க்கவில்லையே என குறிப்பிட்டுள்ளார்.