பாஜக மூத்த தலைவர் எச் ராஜா திருமாவளவனை விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் காரணம் என பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில் இந்த கருத்தை பலர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் திருமாவளவன் இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்! வெறுப்புப் பிரச்சாரம் வேண்டாம்! இந்த இக்கட்டான சூழலிலும் மதம் சார்ந்த வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது, மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இதனை விமர்சிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உங்களுடைய சரக்கு மிடுக்கு பேச்சு, டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்ற பேச்சு, திருப்பதி கோவிலை இடிப்பேன், காமாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆகியவற்றை இடிப்பேன் என்று ஜவாஹிருல்லா முன் பேசிய பேச்சுக்கள் என்ன வகை பேச்சு என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பீதியில் உள்ள இந்நேரத்திலும் அரசியல் தலைவர்களின் அரசிய விமர்சனங்கள் ஒய்ந்ததாய் தெரியவில்லை.