Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ள உறவில் பிறந்த கள்ளக்குழந்தை - கீழ்த்தரமாக விமர்சித்த ஹெச்.ராஜா

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (10:37 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் திமுக எம்.பி.யுமான கனிமொழியை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கீழ்த்தரமாக விமர்சித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அடிபட்டிருப்பதால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, நிர்மலா தேவியை யாரென்றே தெரியாது எனக் கூறியிருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதில் சிலவற்றுக்கு கோபமாகவும், சிலவற்றுக்கு சிரித்துக்கொண்டும் ஆளுநர் பதிலளித்தார்.
 
இந்நிலையில், ஹெச். ராஜா  தனது டிவிட்டர் பக்கத்தில் “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே” எனப் பதிவிட்டுள்ளார்.
 
ஹெச்.ராஜாவின் இந்த பதிவு திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. இது மிகவும் கீழ்த்தரமான பதிவு என அவருக்கு எதிராக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments