இயக்குனர் பா.ரஞ்சித் படத்தை யாரும் பார்க்காதீர்கள் என எச்.ராஜா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக அரசியல், கல்விக்கொள்கை குறித்து பேசிய அவர் இயக்குனர் ரஞ்சித் குறித்தும் பேசினார்.
எச்.ராஜா பேசியதாவது, ராஜராஜ சோழன் குறித்து டைரக்டர் பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இவருக்கு நோக்கம் எப்படியாவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அதுக்காகத்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார்.
மதம் மாற்றும் ஒருசில தீயசக்திகளின் கையாளாக ரஞ்சித் செயல்படுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இது உள்நோக்கம் கொண்ட பொய். அதனால், ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் பார்க்கவே வேணாம்... அவரது படங்களை புறக்கணித்து அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என பேசியுள்ளார்.