தர்மபுரி ஆதினத்தின் பல்லக்கு தூக்கும் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு உள்ளூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியை நடத்துவோம் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் உள்ளன என்றும் இந்து மதத்தைப் பொருத்தவரை குருமகாசந்நிதானம் இறைவனை அடைவதற்கு நமக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் என்றும் அதனால் குருமகாசந்நிதானம்களை பகவானைப் இணையாக பட்டினப் பிரவேசத்தின் போது பல்லக்கைத் தூக்கிச் செல்வது மரபு என்றும் இதில் உரிமையை யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் எச் ராஜா பேட்டியில் கூறினார்
தருமபுரி ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல யார் தடை விதித்தாலும் அந்த தடையை மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை செய்து முடிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்