அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அளித்த பேட்டியின்போது டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்
ஆனால் இன்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை என அரையாண்டு தேர்வு விடுமுறை என வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆனால் டிசம்பர் 24 மற்றும் 25 கிறிஸ்துமஸ் மற்றும் சனிஞாயிறு விடுமுறை என்றும் ஜனவரி 1, 2 தேதியும் புத்தாண்டு மற்றும் சனிஞாயிறு விடுமுறை என்ற கணக்கில் வந்துள்ளதால் அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 27 முதல் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உண்மையில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.