கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றோடு 50 வருடங்கள் முடிவடைகிறது.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார்.
அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.
திமுகவின் முதல் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் இன்று அடியெடுத்து வைத்து தலைவர் பொறுப்பில் பொன்விழா காணுகிறார்.
எனவே, டிவிட்டரில் திமுக தொண்டர்கள் பொன்விழா தலைவர் கலைஞர் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி கருணாநிதி பற்றிய கருத்துகளை மகிழ்ச்சியுடன் பகிருந்து வருகின்றனர். எனவே, இந்த ஷேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.