Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்தனுக்கு அரோகரா!!! ரஜினியால் ஓங்கி ஒலிக்கும் கந்தனின் பெயர்!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (13:14 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான விமர்சனம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒருசில முக்கிய தலைவர்கள் தவிர மற்ற அனைவரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த தனது கண்டனத்தையும் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு...  
 
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 
 
இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!! என்று பதிவிட்டுள்ளார். எனவே தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments