சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பந்த்_வேண்டாம்_போடா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை நிறுத்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தி வந்தாலும், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. இதனிடையே இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக விவசாயிகள் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பை ஏற்று இன்று பாரத் பந்த் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது பகல் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடியும். அதன்படி, விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியிலும் பந்த் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பந்த்_வேண்டாம்_போடா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் சிலர் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.