சென்னையில் இன்று மகளிர் ஆணையத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்களும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தலும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த மகளிர் ஆணையத்தின் பொறுப்பில் எங்களை நியமனம் செய்த நாள் முதல் பல விழிப்புணர்வுகளையும் கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம்.
உலகை ஆட்டிப் படைத்து வருகிற சைபர் கிரைம் பற்றி பேசி வருகிறோம். சமூக வலைதளத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் பற்றி சென்னை, திருச்சி மற்றும் கோவையிலும் இந்தக் கருத்தரங்கத்தை நடத்தி வருகிறோம்.
பெண்களுக்கான சட்டங்கள் பற்றி உரிமைகள் பற்றி பேசிவருகிறோம். கல்லூரி மாணவிகளுக்கான இந்த கருத்தரங்கத்தின் மூலம், மாணவிகளுக்கு டிபியில் புகைப்படங்கள் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். தொழில் நுட்பம் நன்மை செய்யுமளவு தீமையும் செய்துள்ளது. தொழில் நுட்பத்தை எப்படி ஆள வேண்டும் என்பதை மாணவிகளுக்குக் கூறியுள்ளோம் என்று கூறினார்.