கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் கோவையில் உள்ள முத்தூஸ் தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணைக்கு மருத்துவமனை ஒத்துழைக்காததால் அந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளிக்க சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.