தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் மேலும் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆறு மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது
ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வரும் நிலையில் இந்த ஆறு மாவட்டங்களில் கூடுதலான வெப்பம் பதிவாகும் என்று கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஒரு பக்கம் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆறு மாவட்டங்களில் கடுமையான வெப்பம் பதிவாகும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.