தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று 19 மாவட்டங்களில் வெயில் தாக்கத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் தொடக்கம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. தற்போது மே தொடங்கியுள்ள நிலையில் அக்னி நட்சத்திரமும் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது. இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 19 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.