Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல பகுதிகளில் கனமழை: விடுமுறை அறிவிப்பு வெளியாகுமா?

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (20:16 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது என்பது தெரிந்ததே. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் மழை ஓரளவு முடிந்து இயல்பு நிலை திரும்பியதையடுத்து இன்று மீண்டும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம் உள்பட ஒருசில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது 
 
இந்த நிலையில் சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவிலில் உள்பட ஒருசில தென் மாவட்டங்களிலும் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
 
இதனையடுத்து கனமழை பெய்யும் பகுதிகளில் விடுமுறை அறிவிப்பு வெளிவருமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்து வருவதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் தங்கள் வாகனங்களை இயக்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments