டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னைக்கு அருகில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 90 கிமீ தூரத்தில் வலுவிழந்த நிலையில் மையம் கொண்டிருப்பதாகவும் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வட திசையில் நகர்ந்து இன்று நண்பகல் வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.