Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (13:42 IST)
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் காண மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரவு மற்றும் மாலை வேலைகளில் 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று மாலை திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

ஆபாச படங்களை பார்த்து மருமகளிடம் தவறாக நடந்து கொண்ட மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்..!

கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்க பெயரை வைக்கலாமா? - எடப்பாடியாரை தாக்கிய மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments