Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா மழை எதிரொலி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (14:17 IST)
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்ப்பாதால், இதன் எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களுக்கு கன் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
ஏற்கனவே, நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டியது. 
 
மேலும், தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கோவை மாவட்டத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. 
 
சென்னையை பொறுத்தவரை சென்னையின் முக்கிய நகரங்களிலும், வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகரில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில், குறிப்பாக கன்னியாக்குமரி, நெல்லை, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ளதால் கன்னியாக்குமரி, கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments