தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிவுறுத்தல் கடிதம் எழுதியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது மழை பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் உடைந்து விழுதல், போக்குவரத்து தடை போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K