தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பாதிப்புகள் குறைந்து வருவதாக மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் குறுகிய கால முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு குறித்து தெரிவித்துள்ள தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் முழு ஊரடங்கினால் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு அறிவிப்பிற்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.