சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான குற்றவாளி ஜெயகோபால் எங்கே? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சமீபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சாலையில் மோட்டார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அதிமுக பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது பின்னே வந்த லாரி, அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உழுக்கிய நிலையில் இதற்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவந்தனர். இந்நிலையில் பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இன்று வரை அவரை போலீஸார் கைது செய்யவில்லை எனவும், இது குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் திமுகவினர் வாதாடினர்.
இதனைத் தொடர்ந்து, பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணாமாக இருந்த ஜெயகோபால் எங்கே?? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.