கடந்த ஆண்டு மே மாதம் சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையின் ஒன்பது மாடி கட்டடம் தீ விபத்துக்குள்ளாகி முற்றிலும் சேதமடைந்தது.
தீ பிடித்ததால் கட்டிடம் முற்றிலும் சேதமைடைந்ததால், கட்டிடம் இருப்பது ஆபத்தானது என கருதி தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த கட்டிடம் சிஎம்டிஏ விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என, இந்த புதிய கட்டடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எதன் அடிப்படையில் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என பல கேள்விகளை எழுப்பினர். மேலும் 20 நாட்களில் 40% கட்டுமான பணிகள் முடிவடைந்தது எப்படி? என்றும் கேட்டனர்.
அதோடு, புதிய கட்டிடம் கட்டப்பட கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், குடியிருப்பு பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டவும் தடை விதித்துள்ளது.