கடந்த மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதனை அடுத்து பள்ளிகள் தூய்மை படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது,
எனவே மாணவர்கள் இன்று உற்சாகமாக பள்ளிக்குச் சென்றனர்.
இந்த நிலையில், 2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொரொனா ஊரடங்கால் மாணவரக்ளுக்கு பாடங்கள் நடத்தி அவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்யும் பொருட்டு சனிக்கிழமையும் பள்ளிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.